வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேச்சரம் தேர்த் திருவிழா!


வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வர சுவாமி கோயிலின் தேர்த் திருவிழா இன்று சிறப்புற நடைபெற்றது.

அபிசேக ஆராதனைகளுடன் இன்று (வியாழக்கிழமை) காலை வசந்த மண்டபப் பூசைகள் நடைபெற்று விநாயகர், முருகப்பெருமான் – வள்ளி தெய்வானை சமேதரராக எழுந்தருள, நகுலேஸ்வரப் பெருமான் எழுந்தருளி உள்வீதியில் வலம்வந்தார்.

மங்கள வாத்தியங்கள் முழங்க பிராமணர்களின் மந்திர உஷ்டானங்கள் ஒலிக்க முதல் தேரிலே விநாயகப் பெருமானும் இரண்டாவது தேரிலே நகுலேஸ்வரப் பெருமான் சமேத நகுலாம்பிகையும், மூன்றாவது தேரிலே முருகப்பெருமான் – வள்ளி தெய்வானையுடன் இணைந்து தேரேறி வெளி வீதியுலா வந்தனர்.

பக்தர்கள் தேரின் பின்னே பஜனை பாடி மங்கள வாத்தியங்கள் முழங்க தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த மாதம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தில், நேற்றிரவு திருவிழாவாக சப்பைரதத் திருவிழாவும் 14 ஆவது நாளான சிவராத்திரி தினமாகிய இன்று காலை தேர்த் திருவிழாவும் நடைபெற்றது.

இதனை்த தொடர்ந்த, இன்று இரவு சிவராத்திரி விசேட பூசைகள் நடைபெற்று 15ஆம் நாளாகிய நாளைய தினம் கீரிமலை புனித கண்டகி தீர்த்தத்தில் நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவடையவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.