கணவனை மீட்டுத்தருமாறு மனைவி கண்ணீர்..!


திருகோணமலை பூநகர் ஈச்சிலம்பற்று பிரதேசத்தினை உடைய நபர் ஒருவர் காணாமல் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, இந்த மாதம் 09 ஆம் திகதி கொழும்புக்கு கூலி வேலைக்காக சென்ற நிலையில் 13 ஆம் திகதி அதிகாலையிலிருந்து எந்த தொடர்புமற்ற நிலையில் இருப்பதாக மனைவி கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு காணாமல் சென்றவர் 6 மற்றும் 1 1/2 வயதுகளையுடைய 2 பிள்ளைகளின் தந்தையான துரைசிங்கம் சகிந்தன் எனும் இளம் குடும்பஸ்தர்  இவர் குடும்ப கஷ்ட நிலமையினால் கொழும்புக்கு கூலி வேலைக்கு சென்றிருக்கின்றார்.

இதன்போது அவர் அங்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி கொழும்பு குருந்துவத்த பொலிஸில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தன்னிடம் கூறியதாக மனைவி அறிவித்துள்ளார்.

இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய கணவரை வைத்தியசாலையிலையோ / தாம் வசிக்கும் சேருநுவர பொலிஸ் நிலையத்திலோ, தனக்கு அறிவிக்காமல் அவரை குருந்துவத்த பொலிஸ் நிலையத்தினர் திருப்பி அனுப்பியது கவலையளிப்பதாகவும் அவர் கூறினார்.

தன்னுடைய கணவர் இதற்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல எனவும் 13 ஆம் திகதி காலை தன்னிடம் நன்றாகவே கதைத்தாகவும் மனைவி தெரிவித்தார். தனது பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு கணவரை மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்த விடயம் சம்பந்தமாக தமது பூநகர் பிரதேசத்தின் உள்ளடக்கிய சேருநுவர பொலிஸாரிடம் கேட்ட போது அவை தொடர்பான தகவல்கள் உரிய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், விசாரணை தொடர்வதாக கூறியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.