வைத்தியசாலையில் குழந்தை இறப்பு!


வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்த சில மணிநேரங்களில் இறந்த குழந்தை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், விசாரணை திகதியிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, வவுனியா நீதிமன்றில் நேற்று அழைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜூலை ஏழாம் திகதிக்கு வழக்கு விசாரணை திகதியிடப்பட்டது.

குறித்த குழந்தை கடந்த 14.12.2020 அன்று நண்பகல் 12 மணியளவில் பிறந்து, அதேநாளில் மாலை 4.45 மணியளவில் மரணித்திருந்தது. குழந்தையின் தாய்க்கு சத்திர சிகிச்சையின் மூலமே குழந்தையை பிரசவிக்க முடியும் என மகப்பேற்று வைத்தியர் பரிந்துரைத்த நிலையில் வைத்தியசாலையில் இருந்த வைத்தியர்கள் சாதாரண பிரசவத்தின் மூலம் குழந்தையைப் பிரசவிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தாய், “ஏழு மணி நேரத்தின் பின்னர் பிறந்த குழந்தை, பிறந்து சில மணி நேரங்களிலேயே இறந்து விட்டது. இந்நிலையில், எனக்கு சத்திர சிகிச்சை மூலமே குழந்தை பிரசவிக்கப்பட வேண்டும் என மகப்பேற்று வைத்தியர் பரிந்துரைத்திருந்தார். சம்பவ தினமான அன்று வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரிடம் நான் இதனைத் தெரிவித்த போதும் அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வைத்தியர்களின் அலட்சியத்தாலேயே தமது குழந்தை மரணித்தது என பெற்றோர்கள் சந்தேகித்த காரணத்தால் பெற்றோரின் வேண்டுதலின் பேரில் கடந்த 16.12.2020 அன்று குழந்தையின் உடல் சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த மரண பரிசோதனை அறிக்கையில் “Fetal Distress Following Obstructed Labor Due to Clinically Diagnosed Shoulder Dystocia” காரணமாக பிள்ளைக்கு மரணம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இறந்த குழந்தை தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜூலை ஏழாம் திகதிக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது.

மேலும், குழந்தையின் மரணம் குறித்து பெற்றோரால் வடக்கு மாகாண ஆளுநர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.