மகளிர்தினம்..!!

 


காப்பற்றதும் 

மிதமிஞ்சியதுமாய்

பெண் சுதந்திரங்கள்,

ஒன்றையொன்று 

அதியுச்சமாய்

முன்னிழுத்துச் 

செல்கிறது.


சமதளத்தில்

இவ் எதிர்முனைகளை 

இணைத்து

காப்புடன் கூடிய

கட்டுப்பாட்டுடன்

பயணிக்க

சில அவள்களும்

சில அவன்களும்

தயாரில்லை...


தயாராகும்

நேரமதில்

கொண்டாடிக்களிப்போம்

எமக்கான

சுதந்திரத்தை!


தமிழ் மதி 

08.03.2021

யாழ்ப்பாணம். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.