ஹொங்கொங்கின் தேர்தல் முறையில் மாற்றம்!


சீனாவின் ரப்பர்-ஸ்டாம்ப் நாடாளுமன்றம், வீட்டோ வேட்பாளர்களுக்கான அதிகாரங்கள் உட்பட ஹொங்கொங்கின் தேர்தல் முறை மாற்றங்களுக்கு வாக்களித்து இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.

ஹொங்கொங்கில் ஒரு தேச பக்தி அரசாங்கத்தை நிறுவும் நோக்குடனான இந்தத் தேர்தல் முறை மாற்றத்திற்கு சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் இரண்டாயிரத்து 895 உறுப்பினர்கள் ஆதரவளித்ததுடன் ஒருவர்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

ஹொங்கொங்கை ஆளும் அதிகாரத்தை தேசபக்தியுடன் நகரத்தை நேசிக்கும் சக்திகளின் கைகளில் நிலையாக வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் வாங் சென் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 2019ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய வன்முறைப் போராட்டங்களை அடுத்து, அங்கு ஜனநாயகவாதிகளின் ஆதிக்கத்தை அல்லது ஜனநாயகத் தூண்களை அகற்றுவதில் சீனா தீர்க்கமாகச் செயற்பட்டு வருகின்றது.

இதன் முதற்படியாக, ஹொங்கொங்கில் ஜனநாயக ஆர்வலர்களைக் கட்டுப்படுத்த, தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டம் தீவிரமாக நடைமுறைக்கு வந்த நிலையில், டசின் கணக்கான ஜனநாயக ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹொங்கொங் மீதான சீனாவின் அதிகார ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அங்கு தேர்தல் நடைமுறையை சீனா கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஹொங்கொங்கிற்கான சீனாவின் திட்டத்தில் தான் மகிழ்ச்சியடைவதாக ஹொங்கொங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் கூறியுள்ளதுடன் தேசிய பாதுகாப்புக் குறித்து மக்களிடம் புரிதலை ஏற்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.