தாய்லாந்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ள அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி திட்டம்!


தாய்லாந்தில் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா, அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கான நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.

எனினும், நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆஸ்திரியா, டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்குஇரத்தம் உறைந்ததாக புகார்கள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.