அனுபமா பரமேஸ்வரனுக்கு பும்ராவுடன் திருமணமா!!

 


பிரபல கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களிலும் ஒரு சில இணைய தளங்களிலும் செய்திகள் கசிந்து வரும் நிலையில் இதுகுறித்து அனுபமா பரமேஸ்வரன் தாயார் விளக்கமளித்துள்ளார்.


பிரபல கிரிக்கெட் வீரர் பும்ரா, நடந்து கொண்டிருக்கும் அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. சொந்த காரணம் காரணமாக அவர் விடுமுறை எடுத்துள்ளதாக கூறப்படுவதால் அவருக்கு திருமணம் என்று செய்தி கசிந்துள்ளது.


மேலும் பும்ரா, மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாக டேட்டிங் சென்று கொண்டிருந்ததாகவும், இதனால் இருவருக்கும் திருமணம் என்று வதந்தி கிளம்பியது. அதேபோல் அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஜாலியான விடுமுறைக்கு செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தாயார் இது குறித்து விளக்கமளித்துள்ளார். எனது மகள் குஜராத்திற்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக சென்று உள்ளார் என்றும் பும்ராவுடன் திருமணம் என்று வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் சிறிதும் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பும்ரா-அனுபமா பரமேஸ்வரன் திருமணம் என்ற தகவல் வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.