முதல் தடுப்பூசியை பெற்ற கானா ஜனாதிபதி!


 கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில், உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஐ.நா. ஆதரவு கோவாக்ஸ் திட்டத்தின் முதல் தடுப்பூசியை பெற்ற நபராக கானாவின் ஜனாதிபதி நானா அகுபோ-அடோ மாறியுள்ளார்.

கானாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு பரந்த கோவாக்ஸ் திட்டம் தொடங்கவுள்ளது. ஆனால் ஐவரி கோஸ்டில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) தடுப்பூசி போடப்படுகிறது.

அகுபோ-அடோ மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்றும், திட்டத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தும் சதி கோட்பாடுகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

நைஜீரியா இந்த வார இறுதியில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்க உள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா தயாரித்த அஸ்ட்ராஸெனெகா- ஒஃக்ஸ்போர்ட் தடுப்பூசியை 600,000 டோஸ் கொண்டு சென்ற விமானம் கானாவின் தலைநகரான அக்ராவில் கடந்த மாதம் 24ஆம் திகதி தரையிறங்கியது.

கானாவின் சுகாதார அதிகாரிகள் முன்வைத்த திட்டத்தின்படி, முன்கள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.