சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா!

 பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


47 வயதான சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டுகள், 463 ஒருநாள், 1 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களும் எடுத்துள்ளார். 2013-ல் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் டுவிட்டரில் சச்சின் இன்று தெரிவித்துள்ளதாவது,

கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. 

குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா இல்லை எனத் தெரிய வந்துள்ளது. 

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்கள் கூறிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். எனக்கு உதவும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என சச்சின் தெரிவித்துள்ளார்.

ராய்ப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற வீதி பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி, இறுதிச்சுற்றில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.