விடுதலை புலிகளின் முக்கிய உறுப்பினர் திடீர் மரணம்!!

 


தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையின் ஆரம்பத்திற்கு அடித்தளமிட்டவரும் விடுதலைப்புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி பொறுப்பாளராகவும் இருந்த பரதன் (இராசநாயகம் பரதன்) இன்று மாரடைப்பால் காலமானார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டங்களை தமிழ் மக்களின் அவலங்களை வரலாற்று ரீதியாக இன்று வரை நாம் பார்க்கும் வகையில் அன்றே அந்தப் பணியை ஆரம்பித்தவர். பெரும் சவால்கள் நிறைந்த காலங்களில் மிக கடுமையாக பணியாற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிக்கு காரணமாக இருந்தவர்.

புலிகளின் குரல் வானொலிக்கு  ஊடகராக ஒரு பாலமாக பணியாற்றியவர்.


தற்போது லண்டனில் இருந்து மூன்றாம் கண் என்ற நிறுவனத்தை நடாத்தி பல பதிவுகளை செய்து வருபவர். இவர் எழுததாளர் இராசநாயகம் ஆசானின் மூத்த மகனும் மூத்த ஊடகவிலாளர் பாரதி இராசநாயகத்தின் சகோதரரும் ஆவார்.


கடந்த 20 வருடங்களுக்கு மேலாக லண்டனில் வசித்து வருகிறார். 60 வயதான பரதன் இன்று லண்டனில் நடைபயிற்சிக்கு சென்ற போது மாரடைப்பால் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.