மியாமி கடற்கரையில் திரண்ட மக்கள்!


 அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மியாமி கடற்கரை பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வசந்த கால இடைவெளியில் ஏராளமான மக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதனாலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரவு 08.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரை அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது போக்குவரத்து கட்டுப்படுத்தப்படுவதோடு, பரப்பரப்பான தென் கடற்கரை பகுதியில் வணிக நிலையங்கள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த காலம் என்பது அமெரிக்காவின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை காலம், இது வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வரும்.

இது புளோரிடா மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற வெப்ப-வானிலை இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை ஈர்க்கிறது.

" பொறுப்புடன் விடுமுறை கழிக்க வேண்டும் அல்லது கைது செய்யப்படுவார்கள் " என அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை விடுமுறைக்கு முன் எச்சரித்துள்ளனர்,

மேலும் தொற்றுநோய் காரணமாக மாநில அளவிலான நள்ளிரவு கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே அமுலில் உள்ளது.

ஆனால் மியாமி கடற்கரை பகுதி வார இறுதியில் பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது, மேலும் பலர் முகக்கவசம் அணிதல் அல்லது சமூக இடைவெளி பேணல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்திருக்கவில்லை.

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மியாமி கடற்கரையில் சனிக்கிழமையன்று அதிகமான மக்கள் கூட்டம் ஒன்று திரண்டு இருந்தாதாக  நகர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.