வீதியில் வித்தை காட்டிய பொலிஸிற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
பன்னிப்பிட்டிய நகரில் நடுவீதியில் வைத்து நபர் ஒருவரை கொடூரமாகத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் 05ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நுகேகொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தியோகத்தர் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றிலும் ஆஜர்செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்காகிய நபரும் , நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை