அவசர கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!

 


நெதர்லாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையினை மறுதலித்து - தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு நீதி கோரியும், ஜெனிவாப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் அவசர கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெற்றது.

இப்போராட்டம் டென்காக் நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒரு மணியளவில் இடம்பெற்றது.

கொரோனா அச்ச நிலையிலும் நுற்றுக்கு மேற்பட்ட தமிழ் உறவுகள் இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.

தாயகத்தில் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியின் அறிக்கையினை ஆதரிக்கக்கோரியும், நெதர்லாந்து அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையை மறுதலிப்பதற்கான காரணத்தையும் வலியுறுத்தியும் இப்போராட்டம் இடம்பெற்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.