வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!


 சட்டவிரோதமான முறையில் அரிந்த மரங்களை கடத்திச்சென்ற நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த பொலிசார், 

நேற்று (25) மாலை கோதண்ட நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் இருந்து கூமாங்குளம் நோக்கி சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக ஈச்சங்குளம் இராணுவத்திற்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற ஈச்சங்குளம் இராணுவத்தினர் அம்மிவைத்தான் பகுதியில் வைத்து நூதனமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட நபரை வாகனத்துடன் கைது செய்து ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த மரக்கடத்தலில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யபட்டதுடன் பட்டா ரக வாகனம் ஒன்றும் 15 அடி நீளமுடைய 15 அரி மரங்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.  

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.