சீனக்கடலில் சீனப்படகுகள் அத்துமீறி பிரவேசித்துள்ளன!


 தென்சீனக்கடலின் 200 இற்கும் மேற்பட்ட சீனப் படகுகள் அத்துமீறி பிரவேசித்ததோடு அவை பாறையொன்றின் அருகில் காணப்பட்டதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தப் படகுகளின் அத்துமீறிய பிரவேசமானது, தென்சீனக் கடலின் தமக்கான உரிமையையும், சர்வதேச கடற்போக்குவரத்து விதிகளையும் மீறியுள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 

இது குறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கூறுகையில், பிலிப்பைன்ஸின் கடலோரப்பாதுகாப்பு படைகளின் காண்காணிப்பு தகவல்களின் பிரகாரம் 220 சீனாவின் படகுகள் தென்சீனக் கடலின் பிலிப்பைன்ஸ் எல்லைக்குள் பிரவேசித்துள்ளன.

இந்தப் படகுகள் மணிலாவினால் ஜூலியன் பெலிப்பெ ரீஃப் என்று அழைக்கும் விட்சன் ரீஃப் பகுதியில் காணப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர். 

சீனர்களை இவ்விதமான அத்துமீறிய ஊடுருவல்களை நிறுத்துமாறு நாங்கள் கோரிக்கை விடுகின்றோம். இவ்வாறு ஊடுருவி வரும் படகுகள் எங்கள் கடல் உரிமைகளை மீறி எங்கள் இறையாண்மையினுள் அத்துமீறி நுழைந்ததை நினைவு படுத்துகின்றோம் என்று பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் டெல்ஃபின் லோரென்சானா கூறினார்.

இதேவேளை,  இவ்விதமான அத்துமீறிலக்களை அறிந்த பிலிப்பைன்ஸ் உடனடியாக தென் சீனக் கடலில் விமான மற்றும் கடல் ரோந்துப் பணிகளை நடத்தியது என்று அந்நாட்டின் கற்படை செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் எட்கார்ட் அரேவலோ கூறினார், ஆனால் அந்தச் செயற்பாடுகள் எப்போது நடைபெற்றது என்று அவர் கூறவில்லை. 

அதேநேரம், சீனப்படகுகளின் பிரவேசம் தொடர்பில், ஆய்வுகளை நடத்தி கடற்படையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், “பொருத்தமான இராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவை வெறுமனே ஆர்ப்பாட்டங்களைச் செய்வதல்ல” என்றும் கடற்படை குறிப்பிட்டுள்ளது. இந்த தகவல்களில் விரிவான விபரங்கள் காணப்படவில்லை. 

இதேவேளை, பிலிப்பைன்ஸ் சட்டத்தின் பிரகாரம் எமது எல்லைக்குள் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டிலிருந்து விலக மாட்டோம்" என்று மேஜர் ஜெனரல் எட்கார்ட் அரேவலோ கூறினார்.

இந்நிலையில், சீனப் படகுகள் நீண்ட காலமாக குறித்த பகுதியில் உள்ள பாறைகளின் அருகே மீன் பிடித்து வருகின்றன. சமீபத்திய கடல் சூழல் காணரமாக இப்பகுதியில் சிலர் தஞ்சமடைந்திருக்கலாம் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹவா சுனிங் தெரிவித்தார்.

அத்துடன் “இந்த விடயம்  மிகவும் சாதாரணமானது என்று நான் நினைக்கிறேன், எல்லா தரப்பினரும் இதை பகுத்தறிவுடன் பார்க்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பிலிப்பைன்ஸ், வெளியுறவு அமைச்சர் தியோடோடோ லோக்சின், தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவரிடத்தில் கருத்து வெளியிடுகையில், “ஜெனரல்கள் என்னிடம் சொன்னால் மட்டுமே எனது கண்காணிப்பினை அகற்ற முடியும். வெளியுறவுக் கொள்கை என்பது ஆயுதப்படையின் இரும்பு கையுறையில் உள்ள முட்டியாகும்” என்றார். 

2016 ஆம் ஆண்டில் தென்சீனக் கடல் தொடர்பான சீனாவின் கூற்றுக்களில் 90சதவீதமானவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரு சர்வதேச தீர்ப்பாயம்  அறிவித்திருந்தது. ஆனால், அந்த தீர்ப்பினை பெய்ஜிங் அங்கீகரிக்கவில்லை. சமீபத்திய ஆண்டுகளில் சர்ச்சைக்குரிய இந்தக் கடற்பரப்பில் சீனா செயற்கைத் தீவுகளை உருவாக்கியுள்ளது, அவற்றில் சிலவற்றில் விமானப் படைத்தளங்களும்  அமைக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை, இந்த சீனக் கடற்பரப்பினை தாய்வான்,  மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் புருனே ஆகிய அனைத்தும் கடலின் சில பகுதிகளைக் கோருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.