யாழ் கோப்பாய் இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு!தெஹிவளை சேனாநாயக்க மாவத்தையில் பகுதியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலரில் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன 24 வயதான இளைஞனின் சடலம்  கரையொதுங்கியுள்ளது.

தெஹிவளை ஓபன் பிளேஸ் பகுதி கடற்கரையில் இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் 6 பேர் கொண்ட குழுவினருடன் இணைந்து  கடலில் குளிக்கச் சென்றுள்ளார்.
இவ்வாறு கடலில் குளிக்கச் சென்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து, தெஹிவளை அல்விஸ் பிளேஸ் பகுதியில் கட்டிட நிர்மாணப் பணிகளில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.
இவர்கள் தங்கியிருந்த சேனாநாயக்க மாவத்தையில் உள்ள வீட்டில் மது அருந்திய பின்னர், கடலில் குளிக்கச் சென்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.