பெண்களுக்கு எச்சரிக்கை!

 


கொழும்பிலிருந்து பாவனைக்கு உதவாத ஒரு தொகை முகப்பூச்சுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு – டேம் வீதி பகுதியில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் வத்தளையை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத முகப்பூச்சுக்கள் 50 இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியானவை என தெரியவருகிறது.

அத்துடன் சந்தேகநபர் நீண்டகாலமாக இந்த முகப்பூச்சு விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த முகப்பூச்சுக்கள் பாகிஸ்தான், கொரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையில் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் பெண்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், குறிப்பாக பாவனைக்கு உதவாத முகப்பூச்சு, உடற்பூச்சு போன்ற பொருட்கள் தொடர்பில் கவனம் எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.