பிரபல நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் மாரடைப்பால் மரணம்!!

 


தமிழில்,  பில்லா 2, ரேணுகுண்டா, வேல்முருகன் போர்வெல்ஸ், தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள தீப்பெட்டி கணேசன் (37) திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 


மதுரையை சேர்ந்த இவர் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2013ல் திருமணம் செய்து கொண்டார்.


இந்த நிலையில் உடல்நலக்குறைவால் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் தீப்பெட்டி கணேசன் அனுமதிக்கப்பட்டார்.


அங்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இன்று காலமானார். தீப்பெட்டி கணேசனின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


பிரபல இயக்குனர் சீனு ராமசாமியின் பல படங்களில் அவர் நடித்துள்ளார்.


இதையடுத்து சீனு ராமசாமி டுவிட்டரில், எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.


அன்புநிறை இதய அஞ்சலி கணேசா என பதிவிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.