வவுனியாவில் துவிச்சக்கர வண்டி திருட்டுக்கள்!


 வவுனியாவில் துவிச்சக்கர வண்டி திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவி ஒருவரின் துவிச்சக்கர வண்டியும் இன்று திருடப்பட்டுள்ளது.

வவுனியா, வைரவபுளியங்குளம், கதிரேசு வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்குச் சென்ற மாணவர்கள் தமது துவிச்சக்கர வண்டிகளை கல்வி நிலையம் முன்பாக நிறுத்தி விட்டு வகுப்பறைக்கு சென்று கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கற்றல் செயற்பாடு முடிவடைந்து வீடு செல்வதற்காக துவிச்சக்கர வண்டியை எடுக்க வந்த போது குறித்த துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்வி நிலைய நிர்வாகி ஊடாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த புதன்கிழமை வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.