சுற்றுலாத்துறையில் கடமையாற்றுவோருக்கும் கொரோனா தடுப்பூசி!

 


சுற்றுலாத்துறையில் கடமையாற்றுவோருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் சுற்றுலாத்துறையிலுள்ள 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி கூறினார்.

இதனையடுத்து, சுற்றுலாத்துறையினரை மூன்று பிரிவுகளாக வகுத்து அடுத்த வாரம் முதல் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, தற்போது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இவர்களை தவிர சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள், வழிகாட்டிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.