நிலைமையை மாற்ற அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள்!

 


2014 வரை இலாபமீட்டும் நிறுவனமாக இருந்த ச.தொ.ச நிறுவனம், கடந்த ஆட்சியின் போது ஏற்பட்ட பாரிய நஷ்டம் குறித்து தடயவியல் கணக்காய்வு செய்து வருவதாக அமைச்சர் பந்துல கூறினார்.

கடந்த ஆட்சியில் விநியோகஸ்தர்களுக்கு ச.தொ.ச நிறுவனம் ரூ. 08 பில்லியன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலைமை மிகவும் குழப்பமாக இருந்ததால் விசாரணைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதென்றும் அவர் கூறினார்.

எனினும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிறுவனமாக இருந்த சதொச நிறுவனம், கடந்த நாட்களில் அதன் விற்பனையை 102 சதவீதம் அதிகரிக்க முடிந்ததென்றும் அவர் கூறினார்.

415 விற்பனை நிலையங்களைக் கொண்ட ச.தொ.ச வலையமைப்பில் 279 விற்பனை நிலையங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மாற்ற சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.