ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி! இலங்கை ரூபாவின் பெறுமதி ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் 5.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 200 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாளாந்த நாணயமாற்று விகிதாசாரத்திற்கமைய அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 200.06 ரூபாவாகவும் , கொள்வனவு விலை 198.25 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க டொலரின் பெறுமதி 200 ரூபாவாக அதிகரித்தது.

இந்நிலையில் இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலர் பெறுமதியுடன் ஒப்பீட்டளவில் இலங்கை நாணயத்தின் பெறுமதி நூற்றுக்கு 5.2 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.