சொக்லேற் கனவுகள் 25- கோபிகை!!

 


'காதலில்லாத வாழ்வு

காய்க்காத பூக்காத

மரத்திற்கு சமனாம்.....'

கலீல்ஜிப்ரான் சொன்னது....


அதோடு விடவில்லை அவன்,

'ஏய் மண்டு, - உள்ளே 

பூக்களும் கனிகளும் நிரம்பிய 

பூரணம்தான் காதல்' என்றான்....


'ம்..ம்....' என்றபடி

அவள் மௌனம் கொண்டாள்,

அவனோடு மல்லுக்கட்ட 

ஏனோ பிடிக்கவில்லை....


'ஏய்....ஏஞ்சல்....

என்ன ...சத்தமில்லை?'

என்றான் சற்றே தவிப்புடன்

ஆதி. 

'இனிமே பழைய மாதிரி

வார்த்தைக்கு வார்த்தை

உன்னோட மல்லுக்கட்டகூடாதுடா'

என்றாள் மெதுவாக....


'என்னடி..மனைவி லட்சணமா?

அறைஞ்சிடுவன், 

நீ சண்டைபோட்டாதான் 

எனக்கு தெம்பே வரும்,' 


'நீ வாதாடும் போது

எதிரிலிருப்பவர்களுக்கு

உற்சாகம் கொடுக்கிறாய்

உனக்கே தெரியாமல்' என்றான். 


'அன்புக்கு அடைக்கும்தாள் இல்லை,

காதலுக்கு 

கதவே இல்லைன்னு' சொல்றது

சரிதான் போல.....


நீ இப்பல்லாம்

ஓவராத்தான் 

என்னைப் புகழுறாய்டா

என்றாள். 


'என்னவள்....

என் தேவதை....

என் சரிபாதி......

என் சாமி......'


'என் உலகம்.....

என் உயிர்......

என் மூச்சு...

அத்தனையும் நீ.....'


'தங்கமே.....

உன்னைப் புகழுறது

என்னைப் புகழுறதுதான்' 

என்றான் ஆதி. 


காதலின் பிதற்றல்களை

காலமெல்லாம் 

கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்

போலிருந்தது அனுதிக்கு. 


கனவுகள் தொடரும்

கோபிகை.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.