மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவு!

 


இலங்கையில் நேற்றையதினமும் மேலும் 6 கொவிட்-19 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது.


அதன்படி நேற்று உயிரிழந்தவர்களின் விபரங்கள்,


பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையிலிருந்து கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளதுடன் மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.


சுதுஹும்பொல பிரதேசத்தைச் சேர்ந்த, 79 வயதான பெண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 17ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. மரணத்திற்கான காரணங்களாக , இருதய நோய் நிலை மற்றும் கொவிட்-19 நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.


வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், சிக்கலான கொவிட்-19 தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.


புறக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த, 96 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த மார்ச் 14ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. மரணத்திற்கான காரணம், சிக்கலான கொவிட்-19 தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.


கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சிலாவத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி நிகழ்ந்துள்ள நிலையில் மரணத்திற்கான காரணம், கொவிட்-19 என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.