உணவுகளில் ஜொலிக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள்!

 


இந்திய அணி நேற்று இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் படு தோல்வி அடைந்து உள்ளது. இந்த தோல்வியை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.


இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஒரு உணவகம் இந்தியாவில் உள்ள அனைத்து தரமான மற்றும் பாரம்பரிய உணவுகளையும் ஒரே இடத்தில் குவித்து வைத்ததோடு மேலும் இந்த உணவைச் சுவைப்பதற்கு அழைப்பும் விடுத்து இருக்கிறது. அகமதாபாத்தில் உள்ள மேரியாட் எனும் உணவகம்தான் இப்படியொரு அழைப்பை விடுத்து இருக்கிறது. இதில் மேலும் ஒரு சுவாரசியம் என்னவென்றால் அனைத்து உணவுகளுக்கும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் வைக்கப்பட்டு இருப்பது மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


இதனால் மேரியாட் உணவத்தில் தோனி கிச்சடி, கோலி கமான், பாண்ட்யா பத்ரா, புவனேஷ்வர் பார்தா, ரோஹித் ஆலு ரஷிலா, ஷார்த்துல் ஸ்ரீகண்ட், பவுன்சர் பசுண்டி, ஹாட்ரிக் குஜராத்தி பருப்பு, பூம்ரா பிந்தி, ஹர்பஜன் ஹாண்ட்வோ எனும் பலவிதமான உணவுகளை சுவைக்க முடியும். இந்த உணவுகள் அனைத்தும் “மொடீரா தாலி“ எனும் பெயரில் வைக்கப்பட்டு இருக்கும். இந்த உணவுகளை 4 பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடிப்பதுதான் போட்டி.


தற்போது இப்படியொரு வித்தியாசமான போட்டியில் பலரும் கலந்து கொண்டு இந்திய பாரம்பரியத்தின் அனைத்து உணவுகளையும் சுவைத்து வருகின்றனர். மேலும் இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் பெயரைக் கொண்டு இருக்கிற இந்த உணவுகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பர்தீவ் படேல் தனது நண்பர்களுடன் இந்த உணவு சேலஞ்சில் கலந்து கொண்டுள்ளார். அவர் உணவக ஊழியர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது. சர்வதேப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பர்தீவ் படேல் தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.