யாழ்.நகரில் முன்னுதாரணமாகத் திகழ்ந்த இளைஞர்கள் !

 


சமூகநல அமைப்பான Che Foundation இன் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் அனுசரணையில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று முன்தினம் புதன்கிழமை(03) காலை-09 மணி முதல் பிற்பகல்-03.30 மணி வரை யாழ்ப்பாணம் சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி வீதியில் அமைந்துள்ள LIC Lanka Ltd கட்டட மண்டபத்தில் இடம்பெற்றது.


கொரோனா கால  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்ற மேற்படி இரத்ததான முகாமில் ஐந்து யுவதிகள் மற்றும் இளைஞர்கள் என 33 பேர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இரத்ததானம் வழங்கினர்.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவின் மருத்துவர்களான வைத்தியகலாநிதி ம. பிரதீபன், திருமதி பி.ரூபிகா, பொதுச் சுகாதார உத்தியோகத்தர் தங்கராஜா ரவினதாஸ் மற்றும் இரத்தவங்கி உத்தியோகத்தர்கள் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.


யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் மற்றும் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 2019 க.பொ. த உயர்தர மாணவர்கள் இணைந்து Che Foundation எனும் பெயரில் சமூகநல அமைப்பைக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் உருவாக்கியிருந்தனர்.

யாழ்.நகரைத் தளமாக கொண்டு இயங்கி வரும் குறித்த அமைப்பின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் அமையும் என மேற்படி அமைப்பின் நிர்வாகிகளான இளைஞர்கள் தெரிவித்தனர்.


கற்க முடியாத சூழலில் வாழ்ந்து வரும் மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு உதவிகள், பொருளாதார நலிவுற்றவர்களுக்கு உதவிகள் எனப் பல்வேறு உதவிகளை மேற்படி அமைப்பு செய்து வருவதுடன் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

தற்போது யாழ். குடாநாட்டில் நிலவி வரும் இரத்தத் தட்டுப்பாடு தொடர்பான செய்திகளை ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்ட Che Foundation அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தாமாக முன்வந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினருடன் நேரடியாகச் சந்தித்து இரத்ததானமுகாம் நடாத்துவதற்கு தமக்கிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இதன் வெளிப்பாடே மேற்படி இரத்ததான முகாம்.


காலத்தின் தேவையறிந்து தமது சமூக கடமையாக மேற்படி இளைஞர்கள் இரத்ததானம் வழங்கியிருப்பது ஏனைய இளைஞர்களுக்கும் முன்னுதாரணமானது.

தாம் இரத்ததானத்தின் முக்கியத்துவம் கருதி எதிர்வரும் காலங்களில் ஆறு மாதத்திற்கு ஒருதடவை இரத்ததானம் வழங்கவிருப்பதாக மேற்படி அமைப்பின் இளைஞர்கள் எம்முடன் கருத்துப் பகிர்ந்து கொண்டனர்.


Che Foundation அமைப்பு முதன்முதலாக ஏற்பாடு செய்து நடாத்திய மேற்படி இரத்ததான முகாமிலேயே இளைஞர்கள், யுவதிகள் 33 பேர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியிருப்பது பாராட்டுதற்குரியது.

இளைஞர்கள் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. இளைஞர்களிடம் நிறைந்திருக்கும் சக்தியை ஒருங்கிணைத்தால் நாம் பல ஆக்க இலக்குகளை எட்டலாம். எமது மண்ணின் புதிய வரவாகவுள்ள Che Foundation அமைப்பு இளைஞர்களின் பணிகள் வெற்றிகரமாகத் தொடர நாமும் வாழ்த்துவோம். தோளோடு தோள் கொடுப்போம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.