கண்ணீருடன் வீடியோவை வெளியிட்ட மீரா மிதுன்!!
பிரபல மாடல் மற்றும் பிக்பாஸ் சர்ச்சை நடிகையான மீரா மிதுன் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை இணையத்தில் கூறுதுவதும், அதற்கு நெட்டிசன்கள் பலரும் வறுத்தெடுப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது.
அந்த வகையில், ஏற்கனவே விஜய்யின் மனைவி சங்கீதா, ஜோதிகா பற்றியும் படுமோசமாக விமர்சித்தார்.
இதை பார்த்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் விளாசினார்கள்.
மேலும், அதை பார்த்து பதிலுக்கு விளாசியதுடன், விஜய், சூர்யா ரசிகர்கள் பற்றி ட்விட்டரில் பலரிடம் புகார் தெரிவித்தார் மீரா.
இந்நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், என் எல்லா பிரச்சனைக்கும் அப்சரா ரெட்டி என்கிற திருநங்கை காரணம்.
என்னுடைய நண்பனாக நடித்து இத்தனை நாள் இவ்ளோ பண்ணிக்கிட்டு இருக்காங்க. என்னை சுற்றி நடந்த எல்லா குழப்பத்திற்கும் இந்த அப்சரா ரெட்டி தான் காரணம்.
திரையுலகில் இருக்கும் யாருமே காரணம் இல்லை என்பதை நான் இப்போ உணர்ந்துட்டேன்.
மேலும், விஜய் ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள் எல்லாருமே என்னை மன்னிச்சிடுங்க. நடந்த எல்லாவற்றுக்கும் விஜய் மற்றும் சூர்யாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை