ஜோ பைடனை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஸ்வாதி!!

 


அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த வருடம் ‘பெர்சவரன்ஸ்’ என்ற விண்ணூர்தியை (ரோவர்) செவ்வாய்க்கு அனுப்பியது.


இந்த விண்ணூர்தி செவ்வாய் கிரகத்தில் செய்யும் ஆய்வு மூலம், அங்கு உயிர்கள் இருக்கிறதா என்பது குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என ஏற்கனவே நாசா தெரிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதோடு, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்தனுப்பியது.


செவ்வாய் கிரகத்தில் ‘பெர்சவரன்ஸ்’ விண்ணூர்தியைத் தரையிறக்கும் இந்தத் திட்டத்தில், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் (Guidance & Controls Operation Lead) என்ற பொறுப்பை இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஸ்வாதி மோகன் ஏற்று திட்டத்தை வழிநடத்தினார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.