லண்டனில் நடைபெற்று வரும் உணவுதவிர்ப்பு போராட்தற்கு வலுச்சேர்க்க ஒன்றுதிரண்ட பிரித்தானிய தமிழர்கள்

 இன்றைய தினம்  லண்டனில் ஐ நா மனிதவுரிமை சபையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க கூடிய பிரேரணைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் , அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் ஒரு மக்கள் எழுச்சி போராட்டம் நடைபெற்றது.


உள்ளக நேரப்படி மதியம் 12.00 மணிமுதல் நடைபெற்ற குறித்த போராட்டத்தில் பெரும்திரளான இளையோரும் , தமிழ்மக்களும் கலந்துகொண்டிருந்தனர்

 " பிரித்தானிய அரசே தமிழர்களுக்கு உதவு " 
" பிரித்தானிய அரசே அம்பிகை அம்மாவை காப்பாற்று " 
" தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் " 
" இலங்கை அரசின் இனப்படுகொலையை சரவதேச நீதி மன்றில் விசாரி ". போன்ற கோஷங்களை திரும்ப மக்கள் எழுப்பி கொண்டே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது்