உதயநிதி படத்தில் இணைந்த இரண்டு நடிகர்கள்!


 கமர்ஷியல் காமெடி ஜானர்களில் சினிமா கேரியரைத் துவங்கியவர் உதயநிதி. ஆனால், சமீபகாலமாக சவால் நிறைந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். நிமிர், சைக்கோ என நம்பிக்கையூட்டும் படங்களில் நடித்த உதயநிதிக்கு ‘கண்ணை நம்பாதே’ படம் ரிலீஸூக்குத் தயாராகிவருகிறது.

அடுத்ததாக, உதயநிதி நடிக்கும் படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார். இந்தப் படத்தைத் தேர்தலுக்கு முன்பே முடித்துவிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், திட்டமிட்டதற்கு முன்பாகவே தேர்தல் பிரச்சாரத்திற்கு உதயநிதி சென்றதால், இந்தப் படம் துவங்குவதில் பல தாமதங்கள் ஏற்பட்டது. தற்பொழுது, திருச்சி அருகில் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

கூடுதல் அப்டேட் என்னவென்றால், இந்தப் படத்தில் முக்கிய ரோல்களில் பிக்பாஸ் புகழ் ஆரவ் மற்றும் நடிகர் கலையரசன் நடிக்கிறார்கள். இருவரில் ஓரு நடிகர் உதயநிதிக்கு வில்லனாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.அதோடு, நாயகியாக நித்தி அகர்வால் நடித்துவருகிறார்.

தடையறத் தாக்க, மீகாமன், தடம் மாதிரியான ஹிட் படங்களைக் கொடுத்தவர் மகிழ் திருமேனி.. அதோடு, விஜய்க்கு கூட சமீபத்தில் கதை சொல்லியிருந்தார் என்பதால், உதயநிதி படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான ‘ஆர்ட்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் உதயநிதி. இப்படத்தை கனா இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மகிழ் திருமேனி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், உடனடியாக இப்படம் துவங்க இருக்கிறது.

-ஆதினி

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.