பிரசாந்தின் 'அந்தகன்' படத்தில் வனிதா விஜயகுமார் இணைவு!!

 


பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ’அந்தாதூன்’ திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமான ’அந்தகன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே.


இந்த படத்தில் ஏற்கனவே கார்த்திக், சிம்ரன், கேஎஸ் ரவிக்குமார், ,ஊர்வசி, மனோபாலா, உள்பட பலர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 3 நடிகை ஒருவர் இணைந்துள்ளார். அவர்தான் வனிதா விஜயகுமார்.


இந்த படத்தில் வனிதா விஜயகுமார் இணைந்துள்ளதை பிரசாந்த் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பதும் அதற்கு வனிதா விஜயகுமார் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை வனிதா விஜயகுமார், ‘மாணிக்கம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தாலும், கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளுக்கு பின் பிரபலமான வனிதா விஜயகுமார், காற்று என்ற படத்திலும், ஹரி நாடார் நடிக்கும் ’2கே அழகான காதல்’ என்ற படத்திலும் ஹீரோயினியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ’அந்தகன்’ படத்திலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.