'விக்ரம் 60' படத்தில் இணைந்த கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான நடிகர்!

 


கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெரும்பாலான படங்களில் நடித்த தேசிய விருது பெற்ற நடிகர் தற்போது ’விக்ரம் 60’ படத்தில் இணைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது


விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ’விக்ரம் 60’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தில் பாபி சிம்ஹா இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஜிகர்தண்டா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த சப்போர்ட்டிங் நடிகர் என்ற தேசிய விருதினையும் பெற்றுள்ளார்.


இந்த நிலையில் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் ’விக்ரம் 60’ படத்திலும் பாபிசிம்ஹா இணைந்து உள்ளார் என்பதும் இந்த படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.