1000 துண்டுகளாக வெட்டி, நாயுடன் சேர்ந்து சாப்பிட்டுவந்த இராட்சசன்!

 

ஸ்பெயின் நாட்டில் பெற்ற தாயை கொலை செய்து ஆயிரம் துண்டுகளாக நறுக்கி நாயுடன் சேர்ந்து சாப்பிட்டுவந்த நபரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் உணவகத்தில் வேலை பார்த்துவந்த 28 வயதுடைய Alberto Sanchez Gomez, தனது தாய்  Maria Soledad Gomez  (68) கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டியுள்ளார்.

வெட்டிய துண்டுகளை கிட்டத்தட்ட 15 நாட்களாக தனது வளர்ப்பு நாய்க்கும் கொடுத்து தானும் சாப்பிட்டுவந்துள்ளார்.

 என் அம்மா இறந்துவிட்டார், அவரை நானும் எனது நாயும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வருகிறோம் என கூறியதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதில் விசாரணைக்கு பின் சம்பவ இடத்திலேயே Alberto பிப்ரவரி 21-ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு 2 ஆண்டுகளாக நடந்துவரும் நிலையில், கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது Alberto தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான். ஆனால் அவன் கொடுத்த வாக்குமூலத்தால், அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.

Alberto கூறுகையில், 

“தனது தாயைக் கொல்லும்படி பல குரல்கள் காதில் கேட்டதாக கூறியுள்ளார். டிவியில் பார்க்கும் பிரபலங்களின் குரல், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் குரல், தெரிந்தவர்கள் குரல் என பல குரல்கள் உடனே தாயை கொலை செய்யும்படி சொல்லிக்கொண்டே இருந்ததாக கூறினார்.

அனால், தனது தாயைத் தாக்கியதையோ, அவரது உடலை வெட்டியதையோ, அல்லது உட்கொண்டதையோ அவர் நினைவில் கொள்ளவில்லை என்று கூறினார்.

இந்நிலையில், ஆல்பர்டோ மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.