காணாமல் போன குழந்தை -பொதுமக்களிடம் உதவி கோரல்!

 


நீர்கொழும்பு தலஹேனா பகுதியில் இருந்து 2 வயது மற்றும் 10 மாத வயதுடைய ஒரு குழந்தை காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன குழந்தையைக் கண்டுபிடிக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை(என்.சி.பி.ஏ) பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, காணாமல் போன குழந்தையின் தாய் இது தொடர்பாக தம்மிடம் முறைப்பாடு அளித்ததாக தெரிவித்துள்ளது.

சிறுமி தொடர்பாக தகவல் கிடைத்தால் சிறுவர் அதிகாரசபையின் அவசர ஹொட்லைன் 1929 அல்லது தொலைபேசி இலக்கம் 0112 778911 மூலம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.