உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து


தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்க்பபடும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும்அதிகரித்தால் கொரோனாவைரசினால் உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்தெரிவித்துள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.


கொரோனாவைரசினை கட்டு;ப்படுத்த தவறினால் இன்னொரு முடக்கல் நிலைக்கோ அல்லது கடுமையான நடவடிக்கைகளிற்கோ வழிவகுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணிவது சமூகவிலக்கலை கடைப்பிடிப்பது போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டியது பொதுமக்களின் கடமை எனஅவர் தெரிவித்துள்ளார். தீவிர கிசிச்சை பிரிவில் 35 கொரோனா வைரஸ் நோயாளிகளிற்கு சிகிச்சைவழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.