ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

 


முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜூலை மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் கடந்தல் சம்பந்தமாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி, அதன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாக குறித்த இருவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.