இளவாலை பெரியவிளானில் உயிர்காக்கும் உன்னத பணிக்காகத் திரண்ட இளைஞர்கள்

 


யாழ். இளவாலை பெரியவிளானைத் தளமாக கொண்டு இயங்கி வரும் சிகரம் அமையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை(25) பெரியவிளான் பொதுநோக்கு மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது.


காலை-09 மணி முதல் பிற்பகல்-03 மணி வரை இடம்பெற்ற இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் சிகரம் அமைய உறுப்பினர்கள், அவர்களின் நண்பர்கள், அயற் கிராமத்தவர்கள் என 55 வரையான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர்.

சிகரம் அமையத்தைச் சேர்ந்த ஜெ. கமிஸ்டன், அ. அதுஜன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் மேற்படி இரத்ததான முகாம் நடைபெற்றது.

‘உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவின் வைத்தியர் ரி. ஜெயதர்சன், இரத்தவங்கிப் பிரிவின் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தர் கே. சிவநேசன் மற்றும் இரத்தவங்கிப் பிரிவு உத்தியோகத்தர்கள் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.


இதேவேளை, கடந்த தைமாதம்-03 ஆம் திகதி சிகரம் அமையம் கல்வி வளர்ச்சியைப் பிரதான இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமது அமையம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக தற்போதைய இரத்தத் தேவையைக் கருத்திற் கொண்டு இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டுள்ளதாகவும் சிகரம் அமையத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஜெ. கமிஸ்டன் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களிலும் வருடம் தோறும் இரத்ததான முகாம் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது சிகரம் அமையம் உருவாக்கப்பட்ட பின்னர் கடந்த தைமாத இறுதியில் இளவாலையில் அமைந்துள்ள பாடசாலைகளில் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் மாணவர்கள், க.பொ. த சாதாரணதர மாணவர்கள், க.பொ.த உயர்தர மாணவர்கள் ஆகியோரில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள் கொள்வனவு செய்து வழங்கப்பட்டதுடன் மேற்படி மூன்று பிரிவுகளையும் சேர்ந்த அனைத்து மாணவர்கள் மத்தியிலும் பயிற்சிப் பரீட்சைகளும் சிகரம் அமையத்தின் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டன.

மாசி மாத இறுதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற கல்வியில் சிறந்து விளங்கும் ஐந்து மாணவிகளின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து மாணவிகளுக்கான துவிச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்து வழங்கினோம்.


எதிர்வரும் காலங்களிலும் எமது சிகரம் அமையம் கல்வி வளர்ச்சியைப் பிரதானமாகக் கொண்டு பல்வேறு செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(சிறப்புத் தொகுப்பு- செ.ரவிசாந்.)
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.