சொக்லேற் கனவுகள் 30 - கோபிகை!!

 


அவசர அவசரமாய்

வீட்டுக்கு வந்ததும்

அனுதியை அங்குமிங்குமாய்

தேடிக்கொண்டிருந்தான் ஆதி. 

அவன் கண்ணிலேயே 

படவில்லை அவள். 

அவள் ஆடும் கண்ணாம்பூச்சி

அவனுக்கு தெரியாதா என்ன, 


'வந்ததும் வராததுமா

ஏன்டா 

என் மருமகள் பெயரை

ஏலம் விடுறாய்?'


அன்னையின் கேள்விக்கு

என்ன பதில் 

சொல்வதெனத் தெரியாது

பேசாமலே நின்றான். 


'உன் பார்வையும் 

செயலும் சரியில்லையே...

என்ன ராசா....

இடையில் புகுந்தார் அப்பா...


"ஒண்டும் இல்லை...."

தன்மீது தவறென்று 

சொல்ல முடியாதே,

அவனென்ன செய்தான்?


அதே மாதிரி 

அவனுடைய அனுதியை 

குற்றவாளியாக்கவும் 

மனம் வரவில்லை 

அவனுக்கு. 


'அந்தக் கழுதை

பாட்டி வீட்டுக்கு போகிது,'

சொல்லிக்கொண்டே

உள்ளே வந்தனர் 

அனுதியைப் பெற்றவர்கள். 


'என்னம்மா...நீ

குழந்தையை ஏன்...

கழுதை..அது, இதெண்டு'

குறைபட்டார் ஆதியின் தந்தை. 


'அது செய்யிற வேலைக்கு

இதைவிட மோசமா 

சொல்லவேணும்....

அவ்வளவு கோபம் எனக்கு'

அலுத்துக்கொண்டார் 

ஆதியின் அத்தை. 


"ஏன்....அண்ணி, என்ன நடந்தது?"

ஆதியின் தாய் கேட்க 

மகள் தன்னிடம் ஒப்புவித்ததை

சொல்லிமுடித்தார் சகுந்தலா. 


தன் பெற்றவர்கள்

அனுதியை ஒருபோதும்

குறைசொல்ல மாட்டார்கள்

என்றாலும்


தப்பி தவறி கூட

அவளை ஏதும் 

நினைத்துவிடக்கூடாதென்பதில் 

இவனுக்கு மனதில்

ஏக பரபரப்பு. 



'உனக்கெங்கை அறிவு போனது'

அவசரமாய் கேட்ட அன்னையை

முகத்தைச் சுருக்கியபடி 

குழந்தையின் பாவனையில்

பார்த்து வைத்தான் 

ஆதித்தன். 


'எதுவுமே செய்யாதமாதிரி

இது என்னடா...முகச்சுருக்கல்?'

கேட்ட அப்பாவை பார்க்காமலே

அத்தையிடம் திரும்பினான். 


'அவனை ஏன் அண்ணா

பேசுறியள், 

அவனென்ன குழந்தையே,

டொக்ரர், ....அதுவும் சேஜன்....'


அந்த கழுதைக்குத்தான்

அறிவில்லை? 

ஆரோ கையைப் பிடிச்சால்

இதுக்கென்ன வந்தது?'


'நீங்கள் அவளை 

பேசாதேங்கோ அத்தை,

நான் அவளைச் 

சமாதானமாக்கிறன்...'

சொல்லிவிட்டு

பாட்டிவீடு செல்ல 

ஆயத்தமானான் ஆதித்தன். 


'சின்ன வயசில இருந்து

இதைத்தானே செய்யிறாய்,'

அத்தை சொல்ல

புன்னகையோடு நடந்தான். 


கனவுகள் தொடரும்

கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.