மியன்மாரில் 43 சிறுவர்கள் சுட்டுக் கொலை!

 


இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் மியன்மாரில் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் அச்சம், வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்படுவதால் வன்முறை அவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறித்த அமைப்பு எச்சரித்துள்ளது.

அத்தோடு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 536 ஆக உயர்ந்துள்ளது.

ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி தேர்தலில் வென்ற நிலையில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இதனை அடுத்து ஆட்சி மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன்போது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி முன்னர் போராட்டத்தை அடங்கிய இராணுவம் தற்போது துப்பாக்கிச்சூட்டை நடத்திவருகின்றது.

குறிப்பாக கடந்த சனிக்கிழமை மட்டும் மியன்மார் இராணுவம் சுமார் 100 ற்கும் மேற்பட்டவர்களை சுட்டுக்கொலை செய்த நாளே கொடிய நாள் என கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.