இந்தியாவில் ஒரேநாளில் 72 ஆயிரத்தை தாண்டிய தொற்று!


 இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் உச்சம் பெற்றுள்ளது.

அந்தவகையில் நேற்று ஒரேநாளில் 72 ஆயிரத்து 182 பேர் தொற்றுக்கு இழக்காகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 22 இலட்சத்து 669 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் ஒரு கோடியே 14 இலட்சத்து 72 ஆயிரத்து 494 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அத்துடன் நேற்று ஒரேநாளில் 458 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 62 ஆயிரத்து 960 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.