யாழில் அங்கஜன் அணிக்கு ஆப்பு வைத்த டக்ளஸ்!


அங்கஜன் இராமநாதன் தரப்பினரின் தடைகளை மீறி, இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளராக செ.குலபாலசெல்வம் பதவியேற்றுள்ளார்.

நேற்று முன்தினம் (23) அவர் கோண்டாவிலுள்ள தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இ.போ.சவின் வடபிராந்திய முகாமையாளராக குலபாலசெல்வம் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

அவர் தனது நியமன கடிதத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, அந்த நியமன கடிதத்தை அவரும் வழங்கி வைக்க கேட்டார். அதன்படி, டக்ளஸ் தேவானந்தாவும் கடிதத்தை வழங்கி வைத்து புகைப்படம் எடுத்தார். இதையடுத்து, வடபிராந்திய சாலைகளில் ஆட்தொகையில் குறைந்ததும், பலவீனதுமான தொழிற்சங்கமாக, அங்கஜன் இராமநாதன் தரப்பு தொழிற்சங்கம் போர்க்கொடி தூக்கி, அங்கஜனை சந்தித்து நியமனத்தை இரத்து செய்ய கோரியது.

அங்கஜனின் தலையீட்டினால் புதிய முகாமையாளர் நியமிக்கப்பட்டார். இது அங்கஜன் – டக்ளஸ் தேவானந்தா தரப்புக்களிற்குள் அரசியல் மோதலை தீவிரப்படுத்தியது.

இ.போ.ச முகாமையாளர் மட்டுமல்லாமல், வேலணை பிரதேச செயலாளர் இடமாற்றம், நல்லூர் பிரதேச செயலாளர் இடமாற்ற முயற்சியென, அங்கஜன் இராமநாதன் தரப்பினரின் தலையீட்டினால் யாழ் அரச நிர்வாகம் அரசியல் கலப்புடன், சீர்குலையும் அபாயம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், அரச உயர்மட்டத்தின் கவனத்திற்கு டக்ளஸ் தேவானந்தா இந்த விடயங்களை கொண்டு சென்றதாக தெரிகிறது. தனியொரு அரசியல்வாதியின் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப நியமனங்கள் வழங்கப்படக்கூடாதென, சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்பட்ட “டோஸை“ அடுத்து, செ.குலபாலச்செல்வமே மீண்டும் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தில் பொதுஜன பெரமுன தொழிற்சங்கமும் தீவிர அக்கறை காட்டியிருந்தது. அத்துடன், வடக்கிலுள்ள அனைத்து பிரதான தொழிற்சங்க பிரதிநிதிகளும், அவரது பதவியேற்பில் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் செவ்வாய்கிழமை அவருக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே செய்ததை போல, அரசியல்வாதிகள் இனியும் முகாமையாளர் விவகாரத்தில் வாலாட்டினால், பணிப்புறக்கணிப்பு செய்வோம் என பதவியேற்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.