இன்று துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூல ஐந்தாம் நாள் விசாரணை!


துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான ஐந்தாம் நாள் விசாரணை, இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

நேற்று  குறித்த மனுக்கள் மீதான விசாரணை, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, ஜனக் டி சில்வா, புவனேக அலுவிஹார, முர்து பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது இடையீட்டு மனுதாரர் தரப்பின் சட்டத்தரணிகள்,  தங்ளுடைய சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகத்திற்க்கு, சட்டமூலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பான சமர்ப்பணங்களை இன்று முன்வைக்குமாறு நீதிபதிகள் குழாம் அறிவித்தது.

இந்நிலையிலேயே துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான ஐந்தாம் நாள் விசாரணை இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.