இன்று தேங்காய் எண்ணெய் பரிசோதனைப் பெறுபேறுகள் வெளியாகும்!


இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின் இரசாயனம் அடங்கியுள்ளதா? என்பது தொடர்பான பரிசோதனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளன.

அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பெறுபேறுகள் இன்று கிடைக்கப்பெறலாம் என தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாதிரிகளின் அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த 13 தேங்காய் எண்ணெய் தாங்கி ஊர்திகளில் புற்று நோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின் இரசாயனம் அடங்கியுள்ளமை கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் குறித்த இரசாயனம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதென அந்த நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அண்மையில் தெரிவித்தார்.

இதனையடுத்து, அவற்றை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு அண்மையில் பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் குறித்த தேங்காய் எண்ணெயை சந்தையில் தொடர்ந்து விநியோகம் செய்யாமல் தடுப்பதற்காக தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களின் களஞ்சியசாலைகளையும் நுகர்வோர் விவகார அதிகாரசபை முத்திரையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.