கொரோனா தொற்றுக்குள்ளான மருத்துவரின் சகோதரருக்கு கொரோனா!


மாவநெல்ல தள வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவரது சகோதரன் கொவிட் தொற்றினால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் கட்டில் இல்லாததினால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது, மாவநெல்ல தள வைத்தியசாலையில் குறித்த நபர் 24ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற அங்கு கட்டில் இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை, கேகாலை தள வைத்தியசாலையிலும் கட்டில் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.