நாட்டில் மேலும் 650 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
நாட்டில் மேலும் 650 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆயிரத்து 236ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் 156 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 311ஆகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 642 பேர் மரணித்துள்ளதுடன் இன்னும் ஆறாயிரத்து 283 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை