சர்ச்சைக்குரிய விடயத்தை சட்டமாக்க கோரும் பெண் எம்.பி!



இலங்கையில் வெளிநாடுகளைப் போன்று இரவு வாழ்க்கை முறை ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டயானா கமகே தெரிவித்திருக்கின்றார்.

அவ்வாறு ஆரம்பிக்கப்படாவிட்டால் வெளிநாட்டவர்கள் எதற்காகத்தான் இலங்கைக்கு வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற சமூக வலைத்தளத்தின் ஊடான நேர்காணலில் கலந்துகொண்ட போதே அவர் இதனை வினவியுள்ளார்.

இவ்வாறான கலாசார முறையை ஏற்படுத்த பௌத்த மத தர்மமும், கலாசாரமுமே தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தைப் போல இலங்கையில் பொருளாதார முறையை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறிய அவர், தாய்லாந்து மிகப்பெரிய பௌத்த நாடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.