யாழில் புத்தாண்டு தினத்தில் ஒன்றரை வயது குழந்தை இறப்பு!


யாழ்ப்பாணம் மட்டுவிலில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8 வயது சிறுவன் இயக்கிய நிலையில், ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதி குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8 சிறுவன் இயக்கியுள்ளான். இதன்போது மோட்டார் சைக்கிளுக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயதான குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதனையடுத்து குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.  இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை,  மோட்டார் சைக்கிளை இயக்கிய 8 வயது சிறுவனின் சகோதரி என தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.