மண்மேடு சரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு!


தலவாக்கலை, அக்கரப்பத்தனை பிரதேசத்தின் வோல்புறுக் பகுதியில் மண்மேடு சரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீதே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில், அக்கரப்பத்தனை பிரதேசத்தின் பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்தவரும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான சுப்ரமணியம் ரவிக்குமார் (வயது-43) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும், அனர்த்தத்தின் பின்னரான மீட்புப் பணியில் பொலிஸார் மற்றும் மக்கள் ஈடுபட்டதுடன், காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.