தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி!


ஆக்சிஜன் உற்பத்திக்காக தற்காலிகமாக 4 மாதங்களுக்கு மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது தொடர்பில் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்கானிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.