இராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று!


இந்தியா – சீனா இராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

குறித்த பேச்சுவார்த்தை இந்திய எல்லைக்கு உட்பட்ட சுல்சுல் என்ற பகுதியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே இடம்பெற்ற பத்தாவது சுற்று பேச்சுவார்த்தையின் படி சீனா பாங்-காங் ஏரி பகுதியில் நிலைநிறுத்தியிருந்த தன் நாட்டு படையினரை திரும்பப் பெற்றுக்கொண்டது.

இதனால் கிழக்கு எல்லைப்பகுதியில் பலமாதகாலமாக நீடித்து வந்த பதற்றநிலை தணிந்துள்ளது.

இந்நிலையிலேயே இன்று மீண்டும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.